/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணவெளியில் ரூ. 30 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
/
மணவெளியில் ரூ. 30 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
ADDED : பிப் 15, 2024 04:58 AM

அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில் ரூ. 30 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதியில் சாலைகள் அமைப்பதற்காக, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துரூ. 30 லட்சத்தை ராமலிங்கம் எம்.எல்.ஏ., ஒதுக்கீடு செய்தார். இந்த தொகையில் தவளக்குப்பம், சரஸ்வதி நகர், தவமணி நகர் ஆகிய பகுதிகளுக்கு ரூ. 11 லட்சத்திலும், மணவெளி திருமால் நகரில், ரூ. 19 லட்சம் மதிப்பிலும் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.பூமி பூஜையில் பங்கேற்று சாலை அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம், ராமலிங்கம் எம்.எல்.ஏ., ஆகியோர்துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர்கள் அகிலன், சுரேஷ், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உட்பட பா.ஜ., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

