/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 2.32 கோடி மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
/
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 2.32 கோடி மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 2.32 கோடி மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 2.32 கோடி மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
ADDED : அக் 16, 2024 04:33 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறது என, ஆர்டர் செய்து 830 பேர் 2 கோடியே 32 லட்சம்ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் பொருட்களை வாங்குவது கடந்த மூன்று ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு வலைதளங்கள் அதிகளவில் வந்துவிட்டது.
வலைதளங்களில் சென்று ஏதேனும் ஒரு பொருளை வாங்க தேடி பார்த்துவிட்டு,பிறகு வாங்கிக் கொள்ளலாம் என வெளியே வந்து விட்டால், அந்த வலைதளங்களில் எந்த பொருட்களை தேடினோமோ, அந்த பொருளை குறைந்த விலையில் தருகிறோம் என, பேஸ்புக், வாட்ஸ் ஆப், குறிப்பாக இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் நமக்கு தெரியப்படுத்தப்படும்.
உடனடியாக அதே பொருள் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது என நம்பி ஆர்டர் செய்தால் நமக்கு எந்த பொருளும் வராது. கடந்த 9 மாதங்களில் மட்டும் புதுச்சேரியில் 830 பேர் 2கோடியே 32லட்சம்வரை பணத்தை இழந்துள்ளனர். இதில், இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் இதுபோன்று குறைந்த விலையில் கிடைக்கிறது என்று சமூக வலைதளங்களில் ஆர்டர் செய்து பணத்தை இழந்து வருகின்றனர்.
மேலும், சமூக வலைதளங்களில் லிப்ட் மிஷினரி பொருட்கள்,மோட்டார் உதிரி பாகங்கள், நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை மார்க்கெட் விலையை விட பாதி விலைக்கு, ஹோல் சேல் விலைக்கு தருகிறோம் என்று விளம்பரம் செய்யப்படுகிறது.
அந்த நிறுவனங்களைப் பற்றி எதையும் விசாரிக்காமல், விளம்பரத்தை மட்டும் நம்பி பொதுமக்கள் ஆர்டர் செய்து, அவர்களிடமிருந்து எந்த பொருளோ அல்லது அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமல் அதிக அளவில் பணத்தை இழக்கின்றனர்.
மோசடிக்காரர்களை தொடர்பு கொள்ள எந்த ஒரு விலாசம், மொபைல் எண்கள் கிடைப்பதில்லை. வங்கி பரிவர்த்தனையை வைத்து மட்டும் இணைய வழி மோசடிக்காரர்களை பிடிப்பது மிக சிரமமாக இருப்பதால், குறைந்த விலைக்கு பொருட்களை தருகிறோம் என்று சொல்லி இணையவழி மோசடிக்காரர்கள் அதிக அளவில் ஏமாற்றி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம் போன்றவற்றில் வரும் விளம்பரங்களை நம்பி ஆர்டர் செய்தால் 100 சதவீதம் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். எனவே, நம்பிக்கையான பெரிய வலைதளங்களில் மட்டும் பொருட்களை வாங்கி வேண்டும்.
இணைய வழியில் வரும் விளம்பரங்களை நம்பி எந்த பொருட்களையும் ஆர்டர் செய்ய வேண்டாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.