/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பா.ஜ., போட்டியிடும் சிக்கல் இன்றி முடிந்த கூட்டணி பேச்சு

ADDED : பிப் 04, 2024 04:40 AM

புதுச்சேரி : லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணியில், பா.ஜ., போட்டியிடுவது உறுதியாகி உள்ளது
புதுச்சேரிக்கான பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கடந்த வாரம் புதுச்சேரியில் முகாமிட்டார். கட்சி நிர்வாகிகளை அழைத்து லோக்சபா தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா நேற்று காலை புதுச்சேரிக்கு மீண்டும் வந்தார். கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகளுடனும் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டம் முடிந்தவுடன், முதல்வர் ரங்கசாமியின் வீட்டிற்கு சுரானா சென்றார். சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., ஆகியோரும் உடன் சென்றனர்.
ரங்கசாமிக்கு பொன்னாடை அணிவித்த சுரானா, லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் பா.ஜ., போட்டியிட விரும்புவதாக முறைப்படி தெரிவித்தார். இதற்கு ரங்கசாமி சம்மதம் தெரிவித்து விட்டதாக, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அடுத்தக்கட்டமாக, வேட்பாளர் தேர்வில் பா.ஜ., நிர்வாகிகள் முழு வீச்சில் களம் இறங்கி விட்டனர். இதனால், என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணியில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.