/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ரூ. 5 கோடி நிலமோசடி வழக்கு; பத்திர எழுத்தர், புரோக்கர் கைது
/
புதுச்சேரியில் ரூ. 5 கோடி நிலமோசடி வழக்கு; பத்திர எழுத்தர், புரோக்கர் கைது
புதுச்சேரியில் ரூ. 5 கோடி நிலமோசடி வழக்கு; பத்திர எழுத்தர், புரோக்கர் கைது
புதுச்சேரியில் ரூ. 5 கோடி நிலமோசடி வழக்கு; பத்திர எழுத்தர், புரோக்கர் கைது
ADDED : பிப் 19, 2025 05:00 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்த மோசடி வழக்கில், பத்திர எழுத்தர் மற்றும் புரோக்கர் சிவக்குமாரை கைது செய்தனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம், சிவகாமி நகரில் வசித்து வந்த அ.தி.மு.க., பிரமுகர் பிரியா (எ) பச்சையம்மாள், கடந்த 2001ம் ஆண்டு இறந்தார். இவர், கடந்த 1998ம் ஆண்டு, வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு கிராமம், நித்யா பேக்கேஜிங் கம்பெனி அருகில் 14,400 சதுர அடி நிலத்தை வாங்கி, தனது பெயரில் பதிவு செய்து வைத்திருந்தார்.
பிரியா இறந்த தகவல் தெரிந்துகொண்ட கணுவாபேட்டை முனியன், சிலருடன் சேர்ந்து, பிரியா (எ) பச்சையம்மாள் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து, அந்த இடத்தை தனது பெயரில், அதிகாரத்தை மாற்றி பெற்றார். பின்பு, அந்த நிலத்தை மனைகளாக மாற்றி, பலருக்கு விற்பனை செய்தார்.
இதனையறிந்த வில்லியனுார் சப்ரிஜிஸ்டர் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் மோசடி, ஆள் மாறாட்டம் ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்து, கணுவாப்பேட்டை முனியன், 40; காந்தி (எ) நிக்கல்குமார், 48; மற்றும் பிரியா பெயரில் ஆள்மாறாட்டம் செய்த கடலுார் புதுப்பாளையம் சஞ்சீவி மனைவி சூர்யா, 53; சுல்தான்பேட்டை முகமது கபீர், 34; புதுநகர் வடிவேல், 38; ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில், தொடர்புடைய மேலும் பலரை, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப் இன்ஸ்பெக்டர் லியாகத்அலி தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரெட்டியார்பாளையம் புரோக்கர் சிவக்குமாரை, 54; கைது செய்தனர். தொடர்ந்து தேங்காய்த்திட்டு பத்திர எழுத்தர் மணிகண்டன், 36; கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.