/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிமென்ட் சாலை பணி முதல்வர் துவக்கி வைப்பு
/
சிமென்ட் சாலை பணி முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : பிப் 18, 2025 06:32 AM
புதுச்சேரி: புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதி திலாஸ்பேட்டை வீமன் நகர், கருணா ஜோதி வீதியில் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 43 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சீனுவாசன், உதவி பொறியாளர் ராஜ்குமார், இளநிலைப் பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, வீமன் நகரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் ரூ.24 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணியினை முதல்வர் துவக்கி வைத்தார்.

