/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆடம்பர தேர்பவனி முதல்வர் துவக்கி வைப்பு
/
ஆடம்பர தேர்பவனி முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : அக் 14, 2024 08:13 AM

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் 70வது ஆண்டு பெருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, காலை 7:30 மணிக்கு புதுச்சேரி - கடலுார் உயர் மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி, அருட்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. விழாயொட்டி, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7:30 மணிக்கு சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா தலைமையில் திருப்பலி நடந்தது. மாலை 6:00 மணிக்கு நடந்த ஆடம்பர தேர்பவனியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
இதில், திரளான கிறிஸ்துவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (14ம் தேதி) தட்டாஞ்சாவடி பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.