/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்நுட்ப பல்கலை.,யில் மின்னியல் பிரிவு துவக்க விழா
/
தொழில்நுட்ப பல்கலை.,யில் மின்னியல் பிரிவு துவக்க விழா
தொழில்நுட்ப பல்கலை.,யில் மின்னியல் பிரிவு துவக்க விழா
தொழில்நுட்ப பல்கலை.,யில் மின்னியல் பிரிவு துவக்க விழா
ADDED : மார் 17, 2024 05:23 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில், இன்ஸ்டியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் மூலம் 'மாணவர்களின் அத்தியாயம்' எனும் மின்னியல் பிரிவு துவக்க விழா நடந்தது.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மோகன் தலைமை தாங்கினார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் கிறிஸ்டோபர் ஆசிர்ராஜன் வரவேற்றார்.
இன்ஸ்டியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் புதுச்சேரி மாநில மையத்தின் தலைவர் திருஞானம், கவுரவ செயலாளர் சுப்ரமணியன் வாழ்த்தி பேசினர்.
இன்ஸ்டியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் மின்னியல் பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
'டிஜிட்டல் சப்ஸ்டேஷன்' என்ற தலைப்பில், சென்னை ஜென்ரல் எலக்ட்ரிக் டி.என்.டி., இந்தியா லிட்., வாடிக்கையாளர் சேவை மேலாளர் பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.
ஆசிரிய ஆலோசகர் விமல்ராஜ் நன்றி கூறினார்.