/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமுதாயக் கல்லுாரியில் தேசிய பயிலரங்கம் துவக்கம்
/
சமுதாயக் கல்லுாரியில் தேசிய பயிலரங்கம் துவக்கம்
ADDED : மார் 06, 2024 03:05 AM

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலை சமுதாயக் கல்லுாரியில், மூன்று நாட்களுக்கு நடக்கும், விழிப்புணர்வு தேசிய பயிலரங்கம் நேற்று துவங்கியது.
புதுச்சேரி பல்கலை சமுதாயக் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை மற்றும் ஸ்ரீபெரும்புதுார், ராஜிவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும், 'எதிர்கால இளைஞர் வாழ்விற்கான நிலையான நடைமுறைகள்' குறித்த விழிப்புணர்வு தேசிய பயிலரங்கம், கல்லுாரியில் துவங்கியது.
கணிப்பொறி பேராசிரியர் விநாயகம் வரவேற்றார். புதுச்சேரி பல்கலை நுாலகர் விஜயக்குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன், தலைமை உரையாற்றினார். உயிர் வேதியியல் துறைத்தலைவர் தாரகீஸ்வரி நோக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை துணைவேந்தர் ஆறுமுகம் சோணாச்சலம் சிறப்புரையாற்றினார். புதுச்சேரி பல்கலைக்கழக உயிர் வேதியியல் துறை பேராசிரியர் ருக்குமணி வாழ்த்துரை வழங்கினார். உயிர் வேதியியல் துறை பேராசிரியர் வரலட்சுமி நன்றி கூறினார்.
இதில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 100 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் பயிலரங்கம் நடக்கிறது.

