/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி.,யில் புதிய பஸ்கள் துவக்க விழா
/
பி.ஆர்.டி.சி.,யில் புதிய பஸ்கள் துவக்க விழா
ADDED : மார் 01, 2024 02:59 AM
புதுச்சேரி: பி.ஆர்.டி.சி.,க்கு புதியதாக வாங்கப்பட்ட பஸ் துவக்க விழா இன்று நடக்கிறது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வர் ரங்கசாமி சட்டசபையில், பி.ஆர்.டி.சி., வழித்தடத்தில் புதிய பஸ்கள் இயக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ரூ. 17 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, 38 புதிய பஸ்கள் வாங்கப்பட்டது. இதில் 26 பஸ்கள் புதுச்சேரிக்கும், 12 பஸ்கள் காரைக்கால் பகுதிக்கும் வழங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக 12 பஸ்கள் துவக்க விழா இன்று காலை 10.00 மணிக்கு நடக்கிறது.
கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைக்கின்றனர். விழாவில் சபாநாயகர் செல்வம், போக்குவரத்து செயலர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

