ADDED : அக் 08, 2024 03:05 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மையக் கூட்டுறவு விற்பனை விநியோகச் சங்கம் மூலம் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா நேற்று நடந்தது.
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, 3வது பிரதான சாலையில் உள்ள கூட்டுறவு சங்க நவீன அரிசி ஆலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாரத் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து, தனது காரில் ரூ. ஆயிரத்திற்குடீசல் நிரப்பினார்.
இதில், கூட்டுறவுத்துறை செயலர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா, திருச்சி பிரதேச மேலாளர் அருண்சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் விகாஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கூட்டுறவு துறை துணைபதிவாளர் சாரங்கபாணி, மேலாண் இயக்குனர் இளங்கோவன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
