/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அஞ்சலக பணியிட பயிற்சி மையம் திறப்பு
/
அஞ்சலக பணியிட பயிற்சி மையம் திறப்பு
ADDED : அக் 15, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டையில், புதுப்பிக்கப்பட்ட அஞ்சலக பணியிட பயிற்சி மையம் திறக்கப்பட்டது.
தமிழக வட்ட முதன்மை அஞ்சல் தலைவர் மரியம்மா தாமஸ் தலைமை தாங்கி பயிற்சி மையத்தை திறந்து வைத்து, சிறப்புரை ஆற்றினார். புதுச்சேரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் காவ்யா வரவேற்றார். சென்னை மண்டல அஞ்சல் தலைவர் நடராஜன், மண்டல இயக்குனர் மனோஜ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், அஞ்சலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.