/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுப்பிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டடம் திறப்பு
/
புதுப்பிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டடம் திறப்பு
ADDED : ஜன 13, 2024 07:15 AM

புதுச்சேரி : எக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் கழிப்பறை பழுதடைந்திருந்தது. இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், புதுச்சேரி ரோட்டரி கிளப் மிட் டவுன் தலைவர் கிருஷ்ணராஜூக்கு, அதை புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, அவர் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை புதுப்பித்து கொடுத்தார்.
இதற்கு சமூக ஆர்வலர்கள் விஷால், அருள் பிரகாசம் நிதியுதவி செய்ய, ஆனந்தன் இந்த பணியை முன்னெடுத்தார். இந்நிலையில் நேற்று பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சியில், பள்ளி துணை இயக்குனர் சிவராம ரெட்டி, பள்ளித்துணை ஆய்வாளர் வட்டம் -2., குணசுந்தரி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கினர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.