/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை மேம்பாட்டு பணி பாகூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை மேம்பாட்டு பணி பாகூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சாலை மேம்பாட்டு பணி பாகூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சாலை மேம்பாட்டு பணி பாகூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : மார் 14, 2024 05:01 AM
பாகூர், : மதிக்கிருஷ்ணாபுரம், குருவிநத்தம் கிராமத்தில் 88 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவிலான மேம்பாட்டு பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் பாகூர் தொகுதிக்குட்பட்ட மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதுநகர் பிள்ளையார்கோவில் பகுதியில்வடிகால் வாய்க்காலுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்க73 லட்சத்து 17 ஆயிரத்து 908 ரூபாயும், குருவிநத்தம் கிழக்கு புதுநகரில் அங்கான்வாடி மைய கட்டடம் அமைக்க 15 லட்சத்து 53 ஆயிரத்து 310 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்களுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் சுப்ரமணி, இளநிலை பொறியாளர் பிரதீப் மற்றும் தி.மு.க., தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

