/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிறிஸ்து தொழில்நுட்ப கல்லுாரியில் சாம் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா

ADDED : மார் 05, 2024 05:05 AM

புதுச்சேரி: மூலக்குளம் பிச்சவீரன்பட்டில் கிறிஸ்து பொறியில் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் சாம் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா நடந்தது.
புதுச்சேரி மூலக்குளம் பிச்சவீரன்பட்டில் இயங்கி வரும் கிறிஸ்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் சாம் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா நடந்தது.
இவ்விழாவை, சாம் பால் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய அணி கிரிகெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் பங்கேற்று, இக்கல்விக் குழுமத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும், இந்த அகாடமியை பயன்படுத்தி தங்கள் விளயைாட்டு திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.
சிவசங்கர் எம்.எல்.ஏ., மாணவர்களை வாழ்த்தி சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில், சாம் பால் கல்விக் குழுமத்தின் இயக்குனர் குமரவேல், தலைமை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், இக்கல்வி குழுமத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.