/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்க விழா
/
பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்க விழா
ADDED : நவ 12, 2024 08:04 AM

புதுச்சேரி: கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில், கலை, அறிவியல் மற்றும் எந்திரவியல் சார்பில் அறிவியல் கண்காட்சி விழா நடந்தது.
பள்ளியின் தாளாளர் மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். விழாவை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் இனியன் மாணவர்களுக்கு அறிவியல் வளர்ச்சியின் ஏ.ஐ ., தொழிற்நுட்பம் குறித்து பேசினார்.
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் பழனிசாமி அறிவியல் கண்காட்சி திறந்து வைத்தார். புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்தி பேசினார்.
பி மைன்ஸ் சொல்யூஷன் தலைமை இயக்க அதிகாரி சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளி ஆலோசகர் ரத்னபிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் மாணவர்கள் கோஸ்ட் ஹவுஸ், ஏ. ஐ., தொழில் நுட்பத்தில் இயங்கும் ரோபோக்கள், கலைப் பொருட்கள், முதலை, ஆமை போன்றவைகளை காட்சிப்படுத்தினர்.
ஏற்பாடுகளை பள்ளியின் அறிவியல் ஆசிரியர் விரிவுரையாளர் நெடுஞ்செழியன், காயத்ரி, பள்ளியின் பொறுப்பாளர்கள் ஜஸ்டின், ஜீவா ஆகியோர் செய்திருந்தனர்.