ADDED : ஜன 13, 2026 06:52 AM

அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மணமேட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதி மணமேடு பள்ளிக்கூடம் வீதியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ. 19.91 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், இளநிலை பொறியாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
