/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
/
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
ADDED : ஆக 12, 2025 01:48 AM

புதுச்சேரி: மணவெளி தொகுதி அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் 100 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், தனது சொந்த நிதியில் தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் மணவெளி தொகுதியில் உள்ள தவளக்குப்பம் மற்றும் நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. இதையடுத்து, சபாநாயகர் செல்வம் அறிவித்தபடி, தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவருக்கு சொந்த நிதியிலிருந்து ரூ.20,000, 2ம் இடம் பெற்ற மாணவிக்கு ரூ. 15,000 மற்றும் முதல் பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற 48 மாணவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து, பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
இதில், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சிவகாமி, துணை முதல்வர் ராஜசேகரன், தலைமை ஆசிரியர் நுார் முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வரும் கல்வி ஆண்டிலும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கும் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இதேபோன்று ஒவ்வொருவருக்கும் ரூ. ஆயிரம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.