தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'வேளாண் நலத்திட்ட உதவிகள் பெற வருவாய் சான்றிதழ் தேவையில்லை'

 'வேளாண் நலத்திட்ட உதவிகள் பெற வருவாய் சான்றிதழ் தேவையில்லை'

 'வேளாண் நலத்திட்ட உதவிகள் பெற வருவாய் சான்றிதழ் தேவையில்லை'


ADDED : நவ 29, 2025 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வேளாண் தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வேளாண் துறையின் கீழ் செயல்படும் புதுச்சேரி வேளாண் தொழிலாளர் நலச் சங்கத்தின் மூலம் அரசு செயல்படுத்த உள்ளது.

அதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த வேளாண் தொழிலாளர்கள், புதுச்சேரி வேளாண் தொழிலாளர் நல சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்து இருத்தல் அவசியம். பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே உழவர் உதவியகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக முன்பு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி வேளாண் தொழிலாளர்களாக பதிவு செய்து கொள்ள விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ. 75,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இதற்காக வருவாய்த் துறையின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

சிவப்பு ரேஷன் அட்டை வைத்துள்ள வேளாண் தொழிலாளர்களுக்கு அந்த சான்றிதழ் சமர்ப்பிக்க தேவை இல்லை. அதற்கு பதிலாக சிவப்பு ரேஷன் அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். மஞ்சள் அட்டை வைத்துள்ளவர்கள் வருவாய்த் துறையின் சான்றிதழ் அவசியம் பெற வேண்டும்.

இத்தகவலை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us