தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வருமான வரித்துறை ஆலோசனை

 வருமான வரித்துறை ஆலோசனை

 வருமான வரித்துறை ஆலோசனை


ADDED : ஜன 25, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 04:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை வருமானவரித் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் வருமானவரித் துறை சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி அரசு ஊழியர்கள் சம்மேளனம் சார்பில், நடக்கும் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக வருமானவரித் துறை ஊழியர்கள் சம்மேளனம் அகில இந்திய தலைவர் வெங்கடேசன் கலந்து கொள்ள வருகை தந்தார்.

அவருடன் புதுச்சேரி வருமானவரித் துறை ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் வருமானவரித் துறை கெசட்டட் அதிகாரிகள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், முத்தியால்பேட்டை வருமானவரித் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில், வருமானவரித் துறை ஊழியர்கள் சம்மேளன முன்னாள் செயலாளர் கோவிந்தன், புதுச்சேரி சரக வருமானவரித் துறை ஊழியர்கள் சம்மேளன செயலாளர் தயாநிதி, சம்மேளன தலைவர் அரவிந்தநாதன், தலைமை அலுவலக உறுப்பினர் செங்குட்டுவன், சங்க செயலாளர் கணேசன், வருமானவரித் துறை ஓய்வூதியர்கள் சங்க மண்டல செயலாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பொருளாளர் பிரின்ஸ் அபிஷேக் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us