/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வருமான வரித்துறை ஊழியர் மாநாடு தமிழக, புதுச்சேரி நிர்வாகிகள் பங்கேற்பு
/
வருமான வரித்துறை ஊழியர் மாநாடு தமிழக, புதுச்சேரி நிர்வாகிகள் பங்கேற்பு
வருமான வரித்துறை ஊழியர் மாநாடு தமிழக, புதுச்சேரி நிர்வாகிகள் பங்கேற்பு
வருமான வரித்துறை ஊழியர் மாநாடு தமிழக, புதுச்சேரி நிர்வாகிகள் பங்கேற்பு
ADDED : செப் 29, 2024 05:57 AM

புதுச்சேரி : கோல்காட்டாவில் நடந்த வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளத்தின் மாநாட்டில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோல்கட்டாவில், வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளத்தின், 32வது அகில இந்திய மாநாடு கடந்த, 19ம் தேதி துவங்கியது.
வருமான வரித்துறை ஊழியர்களின் அகில இந்திய தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச்செயலாள் ரூபக் சர்க்கார் முன்னிலை வகித்தார்.
மாநாட்டின் முதல் நாள், செங்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அம்மாநிலத்தின் பாரம்பரிய நடனம் நடந்தது. தொடர்ந்து அனைத்து மாநில நிர்வாகிகளின் விவாதம், இரு நாட்களுக்கு நடந்தது.
மூன்றாம் நாளில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சேர்மன் ரவி அகர்வாலிடம், ஊழியர்களின் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அவர் அதை ஆலோசித்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
இந்த நிகழ்வில் வருமான வரித்துறை தமிழக மற்றும் புதுச்சேரி கிளை சார்பாக, 23 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் மதுரை அமைப்பு செயலாளர் ராமலிங்கம், திருச்சி செயலாளர் சுரேஷ், சேலம் ரேஞ்ச் செயலாளர் கந்தபாலன், புதுச்சேரி ரேஞ்ச் செயலாளர் கோவிந்தன், ஈரோடு ரேஞ்ச் செயலாளர் மேபல் மற்றும் வருமான வரி ஊழியர்களின் தமிழக மற்றும் புதுச்சேரி தலைவர் ஷியாம் நாத், கூடுதல் செயலாளர் மதன்குமார் மற்றும் அனைத்து தலைமை செயலக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நிறைவாக மீண்டும், அகில இந்திய தலைவராக வெங்கடேசன், பொதுச்செயலாளராக ரூபக் சர்க்கார் மற்றும் கூடுதல் செயலாளராக ஷியாம் நாத், பெண்கள் கமிட்டி உறுப்பினராக அர்ச்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாடு கடந்த, 26ம் தேதி நிறைவு பெற்றது.