/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வருமான வரி செலுத்துநர் தொடர்பு முகாம்
/
வருமான வரி செலுத்துநர் தொடர்பு முகாம்
ADDED : நவ 19, 2025 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில், சென்னை வருமான வரி ஆணையரகம் சார்பில் வருமான வரி செலுத்துநர் தொடர்பு முகாம் நேற்று நடந்தது.
புதுச்சேரி எஸ்.வி பட்டேல் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த முகாமிற்கு, வருமான வரி இணை ஆணையர் சந்தியா ராணி குரே முன்னிலை வகித்தார்.
துணை ஆணையர் கார்த்திகேயன், அதிகாரிகள் சந்தோஷ் குமார், ஸ்ரீகாந்த் மற்றும் கல்வி, சேவை நிறுவனங்கள், வரி செலுத்துநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் வருமான வரி சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம், பதிவு மற்றும் புதுப்பிப்பு நடைமுறைகள், துறை வழங்கும் சேவை கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

