/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலாதுறை ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதிய ஆணை
/
சுற்றுலாதுறை ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதிய ஆணை
ADDED : மார் 01, 2024 02:59 AM

புதுச்சேரி: சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு உயர்த்தப்பட்ட தொகுப்பு ஊதியத்திற்கான ஆணையை முதல்வர் வழங்கினார்.
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஊதியத்தை ரூ.18,000 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பல்வேறு பிரிவுகளில் கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 63 ஊழியர்களுக்கு ரூ.18,000 மாத தொகுப்பூதியத்திற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் நேற்று வழங்கினார்.
பின் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழக மேலாண் இயக்குனருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலாத்துறை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

