சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி வீடு வீடாக ஓட்டு சேகரிப்பு
சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி வீடு வீடாக ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 08:24 PM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி, வன்னியர் வீதி, ஹவுசிங்போர்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று காஸ் ஸ்டவ் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி, பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். அதன்படி, தொகுதிக்குடப்பட்ட வன்னியர் வீதி, ஹவுசிங்போர்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று காஸ் ஸ்டவ் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆர்த்தி எடுத்தும், மலர் துாவியும் வரவேற்பு அளித்தனர்.
அப்போது சந்துருஜியிடம் வன்னியர் வீதி, ஹவுசிங்போர்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர். அதனை கவனமாக கேட்டுக் கொண்ட வேட்பாளர் சந்துருஜி தாங்கள் எனக்கு காஸ் ஸ்டவ் சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்தால், இப்பகுதி பிரச்னைகளை சரிசெய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
