சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2026 09:38 PM

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் அழகு (எ) அழகனாந்தம் நேற்று பவழ நகரில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அவரை, அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, ராகவேந்திரா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஓட்டு சேகரித்தார். குடியிருப்பு வாசிகள் அழகானந்தத்திற்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அவர்களிடம், அழகானந்தம் பேசுகையில், 'என்னுடைய உழைப்பில் இருந்து கிடைத்த வருவாயில் கதிர்காமம் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். ஒவ்வொரு வீட்டிற்கும் நானே நேரடியாக வந்து ஐந்து முறை நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளேன்.
நான் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. இந்த மண்ணின் மைந்தன் என்கிற முறையில் கதிர்காமம் தொகுதி மக்களுக்கு நான் சேவை செய்ய தேர்தலில் போட்டியிடுகிறேன். தொகுதி மக்களுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளது. நான் வெற்றி பெற்றதும் அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து கொடுப்பேன்' என, கேட்டுக் கொண்டார்.
