சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி தொகுதியில் பிரசார பேரணி
சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி தொகுதியில் பிரசார பேரணி
ADDED : ஏப் 07, 2026 09:47 PM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி காஸ் அடுப்பு சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தொகுதி முழுதும் பிரசார பேரணியில் ஈடுபட்டார்.
முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி, தொகுதி முழுதும் சென்று தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அவரது திட்டத்தினை விளக்கி காஸ் அடுப்பு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வந்தார். அவருக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தும், ஆர்த்தி எடுத்தும் வரவேற்றனர்.
நேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்ளுடன் சேர்ந்து வேட்பாளர் சந்துருஜி தொகுதி முழுதும் சென்று காஸ் அடுப்பு சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, உற்சாகமான ஆதரவை வெளிப்படுத்தினர். பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெருமளவில் பங்கேற்று, பேரணியை வெற்றி பெற செய்தனர்.
