கதிர்காமம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் தீவிர ஓட்டு சேகரிப்பு
கதிர்காமம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 29, 2026 11:03 PM

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அழகு(எ) அழகானந்தம் மாணிக்க செட்டியார் நகரில் தரமான சிமென்ட் சாலை அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்.
புதுச்சேரி கதிர்காமம் சட்டசபை தொகுதியில் சமூக சேவகரும் அழகு அறக்கட்டளை நிறுவனர் அழகு (எ)அழகானந்தம் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அழகு (எ)அழகானந்தம் நேற்று காலை மாணிக்க செட்டியார் நகர், வி.எம். கார்டன் பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்றார். அங்கு அவருக்கு அப்பகுதி மக்கள் பூக்கள் துாவி வரவேற்பு அளித்தனர்.
அந்தப் பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அழகு (எ)அழகானந்தம் தான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக வந்தவுடன் மாணிக்க செட்டியார் நகரில் தரமான சிமெண்ட் சாலையும், வி.எம் கார்டன் பகுதியில் தரமான தார் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.
நேற்று மாலை மாணிக்க செட்டியார் நகர், வடக்கு பாரதிபுரம், தெற்கு பாரதிபுரம் அணைக்கரை வீதி, நெசவாளர் குடியிருப்புப் பகுதியில் ஓட்டு சேகரித்தார். அழகு (எ)அழகானந்தத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து, அழகானந்தத்தை தொகுதி மக்கள் ஒற்றுமையோடு இருந்து வெற்றி செய்யவோம். எனக் கூறினார்.
வாக்கு சேகரிப்பின் போது அந்தந்த பகுதி முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பெண்கள், இளைஞர்கள் மற்றும் அழகு அறக்கட்டளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
