சுயேச்சை வேட்பாளர் பிரபாதேவி ஜெயா நகரில் ஓட்டு சேகரிப்பு
சுயேச்சை வேட்பாளர் பிரபாதேவி ஜெயா நகரில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2026 09:36 PM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பிரபாதேவி வீரராகு தொகுதி முழுதும் சிலிண்டர் சின்னத்திற்கு வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்.
இவருக்கு போகும் இடமெல்லாம் பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். நேற்று ஜெயா நகரில், வீடு வீடாக சென்று சிலிண்டர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் ஆர்த்தி எடுத்தும், மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அப்பகுதி மக்கள், இத்தொகுதியில் வேட்பாளர் பிரபாதேவி வீரராகு செய்து வரும் மக்கள் சேவை, மகளிருக்கு வாழ்வாதார உதவி, பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டி வரும் இவர் 25 பெண்களுக்கு சுயதொழில் துவங்க ரூ.2.5 லட்சம் நிதியுதவி வழங்கியதை நினைவு கூர்ந்து, இவர் உள்ளூர் வேட்பாளர் என்பதால் எளிதில் அனுக முடியும். இதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து பிரபாதேவி வீரராகுவை வெற்றி பெற செய்து, சட்டசபைக்கு அனுப்பி வைப்போம்' என்றனர்.
