சுயேச்சை வேட்பாளர் பிரபாதேவி உழவர்கரையில் ஓட்டு சேகரிப்பு
சுயேச்சை வேட்பாளர் பிரபாதேவி உழவர்கரையில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 05:26 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பிரபாதேவி வீரராகு வீடு, வீடாக சென்று சிலிண்டர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
உழவர்கரை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பிரபாதேவி வீரராகு, நேற்று ரெட்டியார்பாளையம், கம்பன் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று சிலிண்டர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவரை அப்பகுதி பெண்கள் ஆர்த்தி எடுத்தும், மலர் துாவி வரவேற்றனர்.
தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த வேட்பாளர், தேர்தலில் வெற்றி பெற்றதும், இப்பகுதியின் அடிப்படை பிரச்னைகளை முழுமையாக நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
ஓட்டு சேகரிப்பின் போது, தொகுதி முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சிலிண்டர் சின்னத்திற்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேகரித்தனர்.
