தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

 சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

 சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 03, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். தொகுதியில் பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்.

நேற்று உழவர்கரை தொகுதி ஜே.ஜே.நகரில் ஓட்டு சேகரித்தார். அப் பகுதி மக்கள் சரவணனுக்கு ஆரத்தி எடுத்து, மலர் துாவி வரவேற்றனர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு அனைத்து அரசு திட்ட பணிகளை பெற்று கொடுத்துள்ளீர்கள்.

எங்கள் தொகுதிக்கு உங்களை போன்று இளைஞர் வெற்றி பெற்று வந்தால் எங்கள் பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்து கொடுப்பீர்கள்.

அதனால் நாங்கள் ஒற்றுமையாக இருந்து உங்களை வெற்றி பெறச் செய்ய வைப்போம்' என, கூறினர்.

வேட்பாளர் சரவணன், 'இப்பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்து கொடுப்பேன்.

அதற்கு, நீங்கள் குக்கர் சின்னத்தில் ஓட்டு போட்டு என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.

ஓட்டு சேகரிப்பின்போது அப்பகுதி முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us