சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2026 06:31 AM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சரவணன் மேரி உழவர்கரை பகுதிகளில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அவருக்கு பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் சரவணன் பேசுகையில், 'இங்கு நான் 20 ஆண்டுகளாக சமூக பணியில் ஈடுப்பட்டு வருகிறேன். இங்கு இதற்கு முன் இருந்த எம்.எல்.ஏ.,க்கள் என்ன செய்துள்ளனர்.
மேரிஉழவர்கரை பகுதியில் உள்ள குறைகளை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். இளைஞர்களுக்கு வேலை வாயப்பு மற்றும் இங்கு உள்ள மக்களுக்கு அரசு திட்டங்கள், உதவிகளை கொண்டு வந்து சேர்ப்பேன். அதற்கு, நீங்கள் குக்கர் சின்னத்தில் ஓட்டு போட்டு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என, கேட்டுக் கொண்டார். ஓட்டு சேகரிப்பின் போது அந்தந்த பகுதி முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
