சுயேச்சை வேட்பாளர் விநாயகம் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
சுயேச்சை வேட்பாளர் விநாயகம் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 08:30 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் மக்கள் சேவை செய்ய குக்கர் சின்னத்திற்கு ஓட்டு அளியுங்கள் என, கூறி எம்.என்.கே., வேட்பாளர் விநாயகம் ஓட்டு சேகரித்தார்.
தட்டாஞ்சாவடி தொகுதி நேயம் மக்கள் கழக வேட்பாளரர் விநாயகம் நேற்று அவ்வை நகரில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் விநாயகம், தொகுதியில் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறேன். நான் வெற்றி பெற்றால் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மக்கள் எப்போதும் என்னை தொடர்பு கொள்ளலாம். மக்களுக்கு சேவை செய்ய குக்கர் சின்னத்திற்கு ஓட்டு அளியுங்கள் என, கூறினார்.
ஓட்டு சேகரிப்பின் போது வேட்பாளருடன் த.வெ.க., மற்றும் நேயம் மக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
