தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் :இந்தியா 163 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் :இந்தியா 163 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் :இந்தியா 163 ரன்கள் முன்னிலை


UPDATED : செப் 23, 2026 07:47 PM

ADDED : செப் 23, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 07:47 PM ADDED : செப் 23, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், குஷாக்ராவின் சதத்தால், இந்தியா ஏ அணி 163 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள சி.ஏ.பி., சீகெம் மைதானத்தில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கான 4 நாட்கள் மல்டி டே டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் போட்டியில் இந்தியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று, 2வது நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியா ஏ அணி, காயத்தால் ஓய்வு பெற்ற குமார் குஷாக்ரா மீண்டும் களமிறங்கி, தனது 7வது முதல் தர சதத்தைப் பதிவு செய்தார். அவர், 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 334 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஆஸ்திரேலியா அணியின் கோரி ரொச்சிசியோலி 4 விக்கெட்டுகளையும், டாட் மர்பி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின், முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி, இந்திய பந்துவீச்சில் துவக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ், 25 ரன்களில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழக்க, அனுபவமிக்க கேப்டன் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்பை 8 ரன்களில் ஷம்ஸ் முலானியிடம் போல்டாக்கினார். இதனால் 85 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா ஏ அணி திணறியது.

அதன்பின் களமிறங்கிய ஜேசன் சங்கா 46 ரன் எடுத்து ஓரளவு தாக்குப் பிடித்தார். இருப்பினும், அபாரமாக பந்துவீசிய ஷம்ஸ் முலானி 67 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் விக்கெட் சரிவை வேகப்படுத்தினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா ஏ அணி 163 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா ஏ தரப்பில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஸ்கோர் விவரம்:

இந்தியா ஏ (முதல் இன்னிங்ஸ்): 334/10 (117.3 ஓவர்கள்), (குஷாக்ரா 113, தனுஷ் கோட்டியான் 69, சாய் சுதர்சன் 57; கோரி ரொச்சிசியோலி 4/95, டாட் மர்பி 3/77)

ஆஸ்திரேலியா ஏ (முதல் இன்னிங்ஸ்): 171/10 (55.3 ஓவர்கள்), (ஜேசன் சங்கா 46, லியம் ஸ்காட் 26; ஷம்ஸ் முலானி 4/67, துஷார் தேஷ்பாண்டே 2/28)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us