/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய ராணுவ தின விழா மாஜி வீரர்கள் கவுரவிப்பு
/
இந்திய ராணுவ தின விழா மாஜி வீரர்கள் கவுரவிப்பு
ADDED : ஜன 17, 2025 06:08 AM

புதுச்சேரி: வாசவி பன்னாட்டு புதுச்சேரி கிளப், வனிதா கிளப் மற்றும் வர்த்தக கிளப் சார்பில் இந்திய ராணுவ தின விழா நடந்தது.
விழாவிற்கு, வாசவி கிளப்பின் தலைவர் வெங்கடேசன், வனிதா கிளப்பின் தலைவர் சித்ரா ரமேஷ், வர்த்தக கிளப்பின் தலைவர் ஆனந்த் விஸ்வநாத் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இதில், புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் அன்னமுத்து, ஆராவமுது, பாலகிருஷ்ணன், முனியன், கிருஷ்ணமூர்த்தி, கோபாலன், சீதர்பாபு, மைக்கேல் ராயப்பன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டன.
புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன் வாழ்த்தி பேசினார்.