ADDED : ஜூலை 09, 2025 11:57 PM
புதுச்சேரி :  இந்திய கம்யூ., லெனின் நகர் மற்றும் சாமிபிள்ளைதோட்டம் கருணா நகர் கிளை மாநாடு நடந்தது.
லெனின் நகரில் நடந்த மாநாட்டிற்கு கிளை பொருளாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை மூத்த உறுப்பினர் செல்வமணி ஏற்றி வைத்தார். தொகுதி செயலாளர் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து பேசினார்.
புதிய நிர்வாகிகளாக கிளைச் செயலாளராக சரவணன், துணைச் செயலாளர் ஜாபர், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் அரசு மற்றும் புறபோக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருணா ஜோதி நகரில் நடந்த மாநாட்டிற்கு சந்திரகுமார் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் செல்வம் பேசினார். இதில் கிளை செயலாளராக சந்திரகுமார், துணை செயலாளராக அண்ணாமலை, பொருளாளராக மதியழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நாகராஜ், பன்னீர்செல்வம், சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். வாய்க்கால்களையொட்டி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

