தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திய கம்யூ., மக்கள் சந்திப்பு

 இந்திய கம்யூ., மக்கள் சந்திப்பு

 இந்திய கம்யூ., மக்கள் சந்திப்பு


ADDED : பிப் 20, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திய கம்யூ., சார்பில், மாநிலச் செயலாளர் சலீம் தலைமையில், தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, தட்டாஞ்சாவடி தொகுதியில் மக்கள் சந்திப்பு நடைபயணம் நடந்தது.

நடைபயணத்தில், புதுப்பேட்டை, கொட்டுப்பாளையத்தில் நிலுவையில் உள்ள இலவச மனைப்பட்டாக்களை வழங்க வேண்டும். ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுவதைத் தடுக்க வடிகால்களை துார் வார வேண்டும். தொகுதி முழுதும் பெருகிவரும் கஞ்சா கலாசாரத்தை ஒழிப்பது. சி.சி.டி.வி., கேமராக்கள் மற்றும் போலீஸ் ரோந்துப் பணி மூலம் குற்றங்களைத் தடுக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர தீவிர நடவடிக்கை எடுப்பது போன்ற வாக்குறுதிகளை அவர்கள் எடுத்துக்கூறினர்.

புதுப்பேட்டையில் துவங்கிய நடைப்பயணத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் அந்தோணி, தொகுதிச் செயலாளர் முருகன், துணைச் செயலாளர் செந்தில், பொருளாளர் பாஸ்கர், மாநிலக் குழு உறுப்பினர் மோதிலால், செல்வம், மாதர் சங்கச் செயலாளர் ஹேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us