இந்திய கம்யூ., நகரக்குழு மக்கள் சந்திப்பு நடைப்பயணம்
இந்திய கம்யூ., நகரக்குழு மக்கள் சந்திப்பு நடைப்பயணம்
ADDED : ஆக 19, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: இந்திய கம்யூ., நகரக்குழு சார்பில், மக்கள் சந்திப்பு நடைப்பயணம் முத்தியால்பேட்டை தொகுதியில் நடந்தது.
நகர செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். நகர கமிட்டி உறுப்பினர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பிரன் நாரா கலைநாதன் துவக்கி வைத்தார். மாநில செயலாளர் சலீம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
நகரக்குழு உறுப்பினர்கள் சிவகுருநாதன், சசி, லதா, முத்துலட்சுமி, முருகவேல், ஜெயமூர்த்தி, இன்மொழிதனசீலன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். நடைப்பயணத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலை வாய்ப்பும் வழங்கிட வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றிட வேண்டும் உட்பட பல் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
