/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய அரசியலமைப்பு சட்ட ஏற்பு நாள் கருத்தரங்கு
/
இந்திய அரசியலமைப்பு சட்ட ஏற்பு நாள் கருத்தரங்கு
ADDED : பிப் 18, 2025 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டம், ஈரம் பவுண்டேஷன் சார்பில், 75ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட ஏற்பு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
இ.சி.ஆர்., காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் லெனின்துரை தலைமை தாங்கினார். ஈரம் பவுண்டேஷன் ராஜா வரவேற்றார்.
கலை, பண்பாட்டுத்துறை முன்னாள் இயக்குநர் கலியபெருமாள், மேகராஜ், ஜானி முன்னிலை வகித்தனர்.சசிகாந்த் செந்தில் எம்.பி., பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். கருத்தரங்கில், ராஜேந்திரன், இளங்கோ, இனாமுல் ஹசன், லியாகத் அலி ஆகியோர் கருத்துரை வழங்கினார். செல்வன் நன்றி கூறினார்.

