தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு 2023ம் ஆண்டிற்கான சிறந்த சாதனையாளர் விருது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு 2023ம் ஆண்டிற்கான சிறந்த சாதனையாளர் விருது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு 2023ம் ஆண்டிற்கான சிறந்த சாதனையாளர் விருது


ADDED : ஜன 14, 2024 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2024 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு 2023-ம் ஆண்டிற்கான சிறந்த சாதனையாளர் விருதை அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வழங்கி பாராட்டினார்.

2023-ம் ஆண்டிற்கான சிறந்த சாதனையாளர் விருதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், வழங்கி பாராட்டினார்.

தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தில் இவ்விருதை, இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோர் டில்லியில் நடந்த விழாவில் பெற்றுக் கொண்டனர்.

விண்வெளி ஆராய்ச்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்வதில் இஸ்ரோவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளித் துறையில் ஒரே ஒரு புத்தொழில் நிறுவனம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 190 தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. நடப்பு நிதியாண்டில் 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளன. சந்திரயான்-3 உள்நாட்டில் உருவாக்கப்பட்டதோடு, ரூ.600 கோடி மதிப்பீட்டில் மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டது.ஆதித்யா செலுத்தப்படுவதை காண 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், 1,000-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் வந்திருந்தனர்.

அதே எண்ணிக்கையில் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய போதும் இதே அளவில் இருந்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2023-ம் ஆண்டு சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த ஆண்டாக அமைந்தது. விண்வெளியில் கடும் சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரலாற்றுப் சாதனை புத்தகங்களில் இடம் பெற்றது. 2023-ம் ஆண்டில் இஸ்ரோவின் சாதனைகளின் உச்சமாக, சந்திரயான் -3 நிலவின் அறியப்படாத தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக மென்மையாக தரையிறங்கி, சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us