/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய மரபு வழி பாரம்பரிய மருத்துவ விழிப்புணர்வு மாநாடு
/
இந்திய மரபு வழி பாரம்பரிய மருத்துவ விழிப்புணர்வு மாநாடு
இந்திய மரபு வழி பாரம்பரிய மருத்துவ விழிப்புணர்வு மாநாடு
இந்திய மரபு வழி பாரம்பரிய மருத்துவ விழிப்புணர்வு மாநாடு
ADDED : அக் 13, 2025 12:56 AM

புதுச்சேரி; புதுச்சேரி கம்பன் கலையரங்கில், இந்திய மரபு வழி பாரம்பரிய மருத்துவ விழிப்புணர்வு மாநில மாநாடு நடந்தது.
பாரத் சேவா மாற்றுமுறை மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பு மற்றும் அறம் சித்தா, வர்மா அடிமுறை உலக ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த மாநாட்டில், கூட்டமைப்பு தலைவர் சேகர் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ, விவேகானந்தா திறன் மேம்பாட்டு பயிற்சி மைய மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலைய மருத்துவர் தேன்மொழி, பூர்வீகம் மூலிகை உயராய்வு மற்றும் பயிற்சி மைய இயக்குனர் லோகநாதன் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். கூட்டமைப்பு நிர்வாகிகள், சிவானந்தம், மக்துாம், கணேசன், பெரியசாமி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
நிர்வாக தலைவர் மருத்துவர் பாலக்கிருஷ்ணன், அறம் சித்தா, வர்மா அடிமுறை உலக ஆராய்ச்சி நிறுவன தலைவர் மருத்துவர் மதுரானந்தன் ஏற்புரையாற்றினர்.
மக்துதுாம், அழகி தண்டபாணி ஆகியோர் தொகுப்புரையாற்றினர். மாநாட்டில், பல்வேறு இடங்களில் இந்திய மரபு வழி பாரம்பரிய மருத்துவ மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப் பட்டது.