/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய மாதர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
இந்திய மாதர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 26, 2024 06:25 AM

புதுச்சேரி: இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவர் தசரா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் முனியம்மாள், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தலைவர் மல்லிகா தலைமை தாங்கினர். கஞ்சா புழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும், ரெஸ்டோ பார் அனுமதியை ரத்து செய்ய வேண்டும், புதுச்சேரியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டத்தில் மாதர் சங்க செயலாளர் இளவரசி, துணை செயலர் உமா, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக செயலாளர் விஜயா உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.

