/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் குப்பை கிடங்காக மாறும் அவலம்
/
இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் குப்பை கிடங்காக மாறும் அவலம்
இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் குப்பை கிடங்காக மாறும் அவலம்
இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் குப்பை கிடங்காக மாறும் அவலம்
ADDED : ஜன 09, 2025 06:13 AM

புதுச்சேரி: புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றான உப்பளம் இந்திரகாந்தி விளையாட்டு அரங்கம் பராமரிப்பில்லாத காரணத்தால், குப்பை கிடங்காக மாறி வருவது, விளையாட்டு ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியின் தனித்துவ அடையாளங்களுள், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் மிக முக்கியமானது. இந்த அரங்கம் கடந்த, 1992,ல், மொத்தம்,10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த அரங்கில், 400 மீ., ஓடுதளம், புல்வெளி மைதானம், வீரர்கள் தங்கு இடம், பார்வையாளர் கேலரி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் உள்ளன.
அதுமட்டுமின்றி டென்னிஸ், கூடைப்பந்து, கராத்தே, கபடி, பேட்மிட்டன், வாலிபால், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான, ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கமும் உள்ளது. இங்கு தேசிய அளவில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளன. மேலும், பல சாதனை நிகழ்த்திய பல விளையாட்டு வீரர்கள், இந்த அரங்கம் பயிற்சி அளித்திருக்கிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த அரங்கம் தற்போது போதிய பராமரிப்பில்லாமல் பாழாகி வருகிறது.
அங்கு, 50 துப்புரவு பணியாளர்கள் புரிகின்றனர். ஆனாலும் மைதானம் முழுவதும் குப்பை அகற்றப்படாமல், ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடும், தொற்றுநோய் அபாயமும் அதிகரித்துள்ளது.
இது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது:
இந்த விளையாட்டு அரங்கின் கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்மாக சிதைந்து வருகிறது. பெரும்பலான விளையாட்டுகளுக்கு போதிய உபகரணங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு வரும் விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
அந்த அரங்கில் துப்புரவு பணியாளர்கள் பலர் இருந்தும், மைதானம் குப்பை கிடங்காக மாறி வருவது வேதனையாக உள்ளது.