/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாழ தகுதியற்ற இருளர் குடியிருப்பு மத்திய குழு தகவல்
/
வாழ தகுதியற்ற இருளர் குடியிருப்பு மத்திய குழு தகவல்
வாழ தகுதியற்ற இருளர் குடியிருப்பு மத்திய குழு தகவல்
வாழ தகுதியற்ற இருளர் குடியிருப்பு மத்திய குழு தகவல்
ADDED : டிச 09, 2024 06:16 AM

புதுச்சேரி: இருளஞ்சந்தை இருளர் குடியிருப்பை பார்வையிட்ட மத்திய குழுவினரின் காலில் பச்சிளம் குழந்தையை கிடத்தி புயல் பாதிப்பை கூறினர்.
பாகூர் அடுத்த இருளஞ்சந்தை இருளர் குடியிருப்பில் 35 குடும்பத்தினர் வசிக்கின்றனர். வெள்ளத்தால் இப்பகுதி தனி தீவானது. 3 நாட்களாக இப்பகுதிக்குள் யாரும் செல்ல முடியவில்லை. அங்கிருந்த இருளர் மக்கள் மீட்கப்பட்டு அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
புயல் சேதங்களை பார்வையிட சென்ற மத்திய குழு அதிகாரிகள் பாலாஜி, பொன்னுசாமி ஆகியோரிடம், பிறந்து 11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை காலில் கிடத்தி, பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை வைத்து கொண்டு மிகவும் சிரமப்பட்டதாக கூறினார்.
மத்திய குழு அதிகாரிகள் பாலாஜி, நிவாரண முகாமில் தங்கி இருக்கலாமே என கேள்வி எழுப்பினார். அதற்கு நிவாரண முகாம் சில நாட்களில் முடிந்து விட்டது என தெரிவித்தனர். இந்த பகுதி வாழ தகுதியற்ற இடமாக உள்ளது. உடனடியாக இருளர்களை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் என மத்திய குழுவினர் தெரிவித்தனர்.
மற்றொரு பெண் தனது பச்சிளம் குழந்தையை துாக்கி வந்தபோது குறுக்கிட்ட அதிகாரி பாலாஜி, போதும் இதுவே மனதை உருக்குவதாக உள்ளது. உங்களது பாதிப்பு புரிகிறது என கூறி அங்கிருந்து கனத்த மனதுடன் புறப்பட்டனர்.