/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவில் விளையாட்டு போட்டி 9ல் துவக்கம் 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்
/
மாநில அளவில் விளையாட்டு போட்டி 9ல் துவக்கம் 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்
மாநில அளவில் விளையாட்டு போட்டி 9ல் துவக்கம் 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்
மாநில அளவில் விளையாட்டு போட்டி 9ல் துவக்கம் 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்
ADDED : அக் 31, 2024 05:44 AM
புதுச்சேரி: மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் ஏனாமில் வரும் 9ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.
புதுச்சேரி இளைஞர் நலம் விளையாட்டு இயக்குனரகம், பள்ளி கல்வித் துறை சார்பில், பள்ளி மண்டலங்களுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. இதற்கு ஏற்ப புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் நான்கு மண்டலங்களாகவும், காரைக்காலில் உள்ள பள்ளிகள் இரண்டு மண்டலங்கள், ஏனாம், மாகியில் உள்ள பள்ளிகள் தலா ஒரு மண்டலத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தாண்டு மொத்தம் நான்கு கட்டமாக மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே காரைக்கால், மாகியில் இரண்டு, மூன்றாம் கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. நான்காம் கட்ட மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் ஏனாமில் நடக்கிறது.
பூப்பந்து, கூடைப்பந்து, கோகோ போட்டிகளில் இங்கு நடத்தப்பட உள்ளது. எட்டு மண்டலங்களில் இருந்து 800 மாணவர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்த உள்ளனர். புதுச்சேரியில் இன்னும் முதற்கட்ட போட்டிகள் நடத்தப்படவில்லை.
இது குறித்து இளைஞர் நலம் விளையாட்டு இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், 'மூன்று கட்ட மாநில அளவிலான போட்டிகள் வரும் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முதற்கட்ட போட்டி புதுச்சேரியில் ஜனவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எட்டு மண்டலங்களில் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்' என்றார்.