/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எதிர்கட்சிகளின் செல்லபிள்ளையான இன்ஸ்.,
/
எதிர்கட்சிகளின் செல்லபிள்ளையான இன்ஸ்.,
ADDED : பிப் 09, 2025 06:14 AM
ஜாதி, தொழிற்சங்கம் இல்லாத ஒரே துறை காவல் துறை மட்டுமே. ஆனால் புதுச்சேரி காவல் துறையில் இன்ஸ்.., ஒருவரின் செயல்பாடு, அத்துறைக்கே எதிராக உள்ளது. உளவு துறையில் பணியாற்றும் அவர், தனது சமுதாய சக காவலர்களை ஒன்றிணைத்து குழு ஒன்றை உருவாக்கி, அதை வழி நடத்துபவராகவும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பதவி உயர்வு, பணி நியமனம் உள்ளிட்டவைக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருவதுடன், அரசு துறைகள் தர மறுத்தால் அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் ஐடியாக கொடுக்கிறாராம்.
உளவு துறையில் பணியாற்றுவதால், புதுச்சேரி அரசியல் நிகழ்வுகள், முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள், சட்டசபைக்கு விபரங்கள் தகவல்கள் உடனுக்குடன் தன்னுடைய விசுவாச எதிர்கட்சிகளுக்கு தெரிவித்து அவர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
இதனால் எதிர்கட்சிகளின் செல்லப் பிள்ளையாக உலா வரும் இன்ஸ்., அடுத்த ஆட்சியில், எஸ்.பி., பதவி உயர்வு பட்டியலில் தனது பெயர் முதல் நபராக இடம்பெறும் என சக போலீசாரிடம் மார்தட்டி வருகிறார்.
கடந்த 2023ம் ஆண்டு புத்தாண்டு பாதுகாப்பு பணியின்போது, சக இன்ஸ்பெக்டருடன், இவர் கட்டி புரண்டு சண்டையிட்டு, காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

