விசா முடிந்தும் தங்கியுள்ள இலங்கை ஆசாமி குறித்து விசாரணை
விசா முடிந்தும் தங்கியுள்ள இலங்கை ஆசாமி குறித்து விசாரணை
ADDED : மார் 13, 2024 07:00 AM
புவனகிரி : விசா முடிந்தும் தங்கிய இலங்கை ஆசாமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையை சேர்ந்தவர் தரணிதரன்,52; இவர், கடந்த 2001 மே மாதம் படகு மூலம் தமிழகம் வந்தவர், சிதம்பரம் அடுத்த கீரப்பாளையத்தில் வசித்து வந்த இலங்கை தமிழரான உதயச்சந்திரன் வீட்டில் தங்கினார். அதே ஆண்டு, கீரப்பாளையத்தில் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டு, 2002ல் முறைப்படி பதிவு செய்துள்ளார்.
ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், குடும்பத்துடன் கீரப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு அனுமதி பெற்று தாய் நாடான இலங்கைக்கு சென்றவர், அதே ஆண்டு பாஸ்போர்ட் மூலம் விசா பெற்று தமிழகம் வந்தார். அவரது விசா காலம், 2017 டிசம்பர் 6ம் தேதியுடன் முடிந்தும் இலங்கை செல்லாமல், கடந்த 7 ஆண்டுகளாக புதுச்சேரியில் வசித்து வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து கீரப்பாளையம் வி.ஏ.ஓ., தர்மா அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
