ADDED : ஜன 19, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: சோரப்பட்டில் வாழையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரி, மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரியில் இளநிலை இறுதியாண்டு பயிலும் தோட்டக்கலைத் துறை மாணவர்கள் சோரப்பட்டில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சோரப்பட்டில் வாழையில் ஏற்படும் நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப் படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.இதில், திரளான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

