/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைமை செயலர் பிரமாண பத்திரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தல்
/
தலைமை செயலர் பிரமாண பத்திரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தல்
தலைமை செயலர் பிரமாண பத்திரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தல்
தலைமை செயலர் பிரமாண பத்திரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 18, 2025 04:03 AM
புதுச்சேரி: தலைமை செயலர் சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, விவாதிக்க வேண்டும் என, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தின் சார்பில், தலைமைச் செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு கவர்னர், காரணம் ஏதுமின்றி நிறுத்தி வைத்திருந்த சட்ட மசோதாக்கள் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்., 8ம் தேதி, அளித்த தீர்ப்போடு முரண்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வாதத்திற்கு இசைவாக ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு சில தன் விருப்ப அதிகாரங்கள் உண்டு என்றும், இது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது அல்ல என்றும் அந்த பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
தலைமை செயலாளர் மத்திய பா.ஜ., அரசின் கொள்கைகளின் ஊது குழலாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பிரமாண பத்திரம் அடிப்படை ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வர் ரங்கசாமி தனக்கு அதிகாரம் இல்லை என்று புலம்புகிறார். மாநில அதிகாரம் தான் தீர்வு என்று கூறும் நிலையில், தலைமை செயலாளர் பத்திரத்தின் அரசியல் பின்னணி என்ன. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை செயலாளரால் கையொப்பமிடப்பட்ட பிரமாண பத்திரம் யாருடைய ஆலோசனையின் பேரில் தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பற்றி விவாதித்திட அனைத்து கட்சிகள் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.