/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவிலியர் பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தல்
/
செவிலியர் பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தல்
செவிலியர் பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தல்
செவிலியர் பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தல்
ADDED : அக் 24, 2025 03:06 AM
புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி செவிலியர் பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது:
மத்திய அரசின் சுகாதாரத்துறையில் 3,500 செவிலியர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதில் புதுச்சேரி ஜிப்மருக்கு மட்டும் 454 பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஜிப்மரில் கடந்த காலங்களில் செவிலியர் உள்ளிட்ட மற்ற பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு ஜிப்மர் நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.
அந்தமுறை மாற்றப்பட்டு அகில இந்திய அளவில் செவிலியர் தேர்வுமுறை என்று சொல்லி 3,500 பணியிடங்களுக்கும் பல மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜிப்மரில் தேர்வு மையம் இல்லை.
இதனால் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வடமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலை உள்ளது. இதேபோல் புதுச்சேரி மாநில அரசும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் 200க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை எந்தவித நுழைவு தேர்வும் இல்லாமல் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது.
செவிலியர் பணி நுழைவு தேர்வு இல்லாமல், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது மிகப்பெரிய ஊழலுக்கு இடம் கொடுக்கும். ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும்' என்றார்.

