/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொசியத்தே புரோகிரேசீஸ்த ் பள்ளியை மீட்க வலியுறுத்தல்
/
சொசியத்தே புரோகிரேசீஸ்த ் பள்ளியை மீட்க வலியுறுத்தல்
சொசியத்தே புரோகிரேசீஸ்த ் பள்ளியை மீட்க வலியுறுத்தல்
சொசியத்தே புரோகிரேசீஸ்த ் பள்ளியை மீட்க வலியுறுத்தல்
ADDED : அக் 09, 2025 02:10 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நுாற்றாண்டுப் பாரம்பரியமிக்க 'சொசியத்தே புரோகிரேசீஸ்த்' பள்ளியை அரசு மீட்க வேண்டும் என மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் ராமச்சந்திரன் அறிக்கை:
பா.ஜ., - என்.ஆர்.காங்., அரசில், அரசு பள்ளிகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாகப் புதிய பள்ளிகள் எதுவும் திறக்கப்படாத நிலையில், 15க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நுாற்றாண்டை கண்ட சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளி மூடப்பட்டு, ரெஸ்டாரண்டிற்கு வாடகைக்கு விட்டிருப்பது, கல்வி மீது ஆட்சியாளர்களுக்கு இருக் கும் அக்கறையின்மையையே காட்டுகிறது.
கடந்த 1921ல் இருந்து உயரிய நோக்கில் செயல்பட்டு வந்து, 1986ம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளியாக சிறப்பாக செயல்பட்ட இப்பள்ளி, தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான கல்விக் கொள்கையால் ரெஸ்டாரண்டாக மாறியுள்ளது.
இப்பள்ளி வெறும் கல்விக்கூடம் மட்டுமல்ல. மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் கலை, இலக்கியம், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் கலாசார மையமாகவும் திகழ்ந்தது. இதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
எனவே, இப்பள்ளியை, அரசு உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.