/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கலெக்டர், தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
/
ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கலெக்டர், தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கலெக்டர், தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கலெக்டர், தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 01, 2024 02:55 AM

புதுச்சேரி: லோக்சபா தேர்தலுக்கான ஒட்டு எண்ணிக்கை மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கல்லுாரிகளை கலெக்டர் குலோத்துங்கன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
புதுச்சேரி தேர்தல் துறை, லோக்சபா தேர்தலையொட்டி முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறது. லோக்சபா தேர்தல் முடிந்ததும்,புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி , மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக்கல்லுாரிக்கு கொண்டு வரப்பட்டு,அங்குள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட உள்ளது.ஓட்டு எண்ணிக்கை துவங்கும் தேதி வரை இவை பாதுகாக்கப்பட உள்ளது.
இந்த ஓட்டு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் நேற்று பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.குடிநீர்,மின் இணைப்பு,தீயணைப்பு,கழிப்பறை வசதிகளையும் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் ஒருங்கிணைந்து செய்து கொடுக்க வேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
பின் கலெக்டர் குலோத்துங்கன் கூறும்போது, லோக்சபா தேர்தலையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.அதிகாரிகளுடன் ஆய்வு செய்து உள்ளோம். தேர்தலுக்கான பயிற்சி அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நடந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும். தேவையான அளவுக்கு துணை ராணுவப்படையினரும் தேர்தல் பணிக்கு வருவார்கள் என்று தெரிவித்தார்.
சந்திப்பின்போது நோடல் அதிகாரி சுதாகர்,தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

